ரோகினி நதியிலிருந்து பெருக்கெடுத்த வெள்ளம்
நிலப்பரப்பு முழுவதும் ஈரப்பசையை பரப்பி
மனங்களில் வளர்ந்து கிடக்கும் பசுமை
அர்த்த ராத்திரியில் திருட்டுத்தனமாய் அறுத்துவிட்ட கதிர்கள்
கைபர்கணவாய் வழியாய் வந்த கூட்டம்
கொல்லையடித்துவிட்டதை பேசிக்கொள்கிறார்கள்
முச்சந்தியில் கூடும் சேரிக்காரர்கள்
கொட்டிவிட்ட நெல்மணிகளை
பொறுக்கும்போது அறுத்துவிடுகிறது காய்ந்து கிடக்கும் வயக்காட்டு வெடிப்புகள் யாரிடமிருந்தும் எங்களை பாதுகாத்துக்கொள்ளும்உன்னை வடக்கு பார்த்தே வைப்போம்
கொல்லைக்கூட்டங்களை எதிர்கொள்ளும் காவக்காரச்சாமி
No comments:
Post a Comment