Saturday, April 3, 2010

நீண்டகால ஆர்ப்பரிப்பில் தொடரும்




பேசும் திராணியும் போர்க்கள முழக்கமும்
அதோ அந்த சேரியின் வீதிகளில்
ஒலிக்கக்கேட்டுத்தான் வளர்த்தெடுக்கப்பட்டு
முழங்கைக்குமேல் சுருண்டுகிடக்கிறது நீல முழுக்கைச்சட்டை
தம்மத்தின் அரியணையில் அக்கிலிஷின்
கண்ணில் அறியும் வீரமொன்றோடு
வாளை சுழற்றும்போது உதிரும் இந்துத்துவ தலைகள்
வெட்டி வீழ்த்தப்படும் வெறும் பழம்புராணக்கதைகள்
ஆரவாரத்துடன் திரும்பும் படைகள்
காலால் புரட்டிப்போட்ட முண்டங்களை கொத்தி தின்னும் கழுகுகள்
அப்பொழுது தீட்டு கழித்து மந்திரம் ஓதி தனியே புலம்புவதற்கு
ஆளற்று சுகமாய் மூச்சு விடும் என் தேசம்

No comments:

Post a Comment