கட்டுக்குள் அடங்காமல் திரியும் இளஞ்சிறுத்தைதிமிரும்வேளையில் யார்யாரின் முகத்திலோ நகக்கீறல்கள்
சிறுத்தையின் குகைக்குள் நரிகள் ஓலமிடுவதில்லை
சேரியின் எரிநெருப்பில்
சீண்டுபவன் செத்தேபோவான்
மௌனத்தை காத்திடாத சிறுத்தைகள் பொறுப்பதில்லை
சிந்திக்கும்வேளையில் மௌனத்தை விடுவதில்லை
அடித்து நொறுக்கிடும் சிறுத்தைகள்
யாருக்கும் அஞ்சுவதில்லை
அப்பாவிகளை சீண்டுவதும் இல்லை
காட்டு மரங்கள் நிறைந்த வனத்தில்
காட்டாறுகள் ஓடும் இந்த மண்ணில்
சிறுத்தைகள் துள்ளி விளையாடும் குழந்தைகள்
பாறாங்கல்லில் படுத்தபடியே பறையொலிக்கு காலாட்டி
மயிலின் ஆட்டத்தை பார்த்திடும் கம்பீர தோரணை
காட்டுச்சேரிக்குள் சிறுத்தைகள் உலவுவதால்
ஊருக்குள் புகுந்துகொண்டது நரிகள்
வீசப்படும் வலைகளை அறுத்து எறியும் சிறுத்தைகள்
ஒருபோதும் மனிதர்களைத் தாக்கியதில்லை
குள்ளநரிகள் குழி பறிக்கும்
சிம்மாசனத்தின் சிறுத்தைகள் அதை தாண்டும்
அடர்த்தியாய் வீசும் காற்றில் பிளவுபடும்
மரத்தின் சத்தத்தை கேட்டு ஓடும் நரிகள்
சிறுத்தைகள் உறுமுகிறது
No comments:
Post a Comment