நெருக்கமாய் வந்து காதில் கேட்கிறாய்
உன்னால் வெளியேற்றப்படும்
காற்றலைகள் பட்டும்படாததுமாய்
விழுகிறது காதில்..
எந்தவித கூச்சமுமற்று பேசும்
உன் மொழிகள் என்னை
ஒருபோதும் கவர்ந்ததேயில்லை
ஆத்திரத்தை
அள்ளிக்கொட்டுகிறது நெஞ்சில்
உன் முகங்கண்டு மிருகங்கள்
ஞாபகத்திற்கு வருகின்றன.
கொம்புகள் முளைத்திட்ட
உன் தலையில்
வெட்டி எறிய வேண்டியது
கொம்பையா... உன் தலையையா..
நீ தூரத்திலிருந்து கேட்டாலும்
கிட்ட வந்து கிசுகிசுத்தாலும்
உன்னால்
எனக்கு எதுவும் ஆகப்போவதில்லை
நான் பறையன்தான்.
No comments:
Post a Comment