சுவர் எழுப்பி சாதி வளர்த்து
மின்சாரத்தைப் பாய்ச்சுகிறாய் நெஞ்சில்
யாகத்தீயாய் வளரும்
உன் அரக்கக்குணம் பிசகாமல் படர்கிறது
செங்கற்களின் இடைவெளிகளிலும்
அதுக்கப்பாலுள்ள மனிதக்கூட்டங்களிலும்...
எழுப்பப்படாத சுவரொன்று
ஊருக்கும் சேரிக்கும் மத்தியில் ஓடுகையில்
வெளிச்சத்தைப் பளிச்சென்று காட்டுகிறாய்
மனிதனின் நாகரிக வளர்ச்சியில்
வளர்ந்துவிட்டது கட்டிடக்கலை அதை
அனாவசியமாய் அசிங்கப்படுத்தும்
உன் நல்லெண்ணத்தை
சுவரோடு கலந்து பொசுக்கிவிடு
மின்சாரத்தைப் பாய்ச்சுகிறாய் நெஞ்சில்
யாகத்தீயாய் வளரும்
உன் அரக்கக்குணம் பிசகாமல் படர்கிறது
செங்கற்களின் இடைவெளிகளிலும்
அதுக்கப்பாலுள்ள மனிதக்கூட்டங்களிலும்...
எழுப்பப்படாத சுவரொன்று
ஊருக்கும் சேரிக்கும் மத்தியில் ஓடுகையில்
வெளிச்சத்தைப் பளிச்சென்று காட்டுகிறாய்
மனிதனின் நாகரிக வளர்ச்சியில்
வளர்ந்துவிட்டது கட்டிடக்கலை அதை
அனாவசியமாய் அசிங்கப்படுத்தும்
உன் நல்லெண்ணத்தை
சுவரோடு கலந்து பொசுக்கிவிடு
No comments:
Post a Comment