மழை பெய்த நாளொன்றில்
சிக்கிக்கொண்ட அந்த வீதியில்
எந்த கூரையின் கீழும் அண்டாமல்
மழையின் கூடாரத்தில் தங்கிவிட்ட மனம்
நனைந்து அவனோடு கைகோர்த்துக்கொண்டது
தொட்டுப்பழகத் தெரிந்த
அவன் எனக்கொரு புதிய நண்பன்
தொடுவதில் உள்ளர்த்தமற்று பேசும் நவீனத்தோழன்
மழை பெய்த நாளொன்றில்
ஒதுங்கிக்கொண்ட குடிசையிலிருந்து தொடுகிறேன்
மூங்கில் வழியாய்ச் சொட்டும் நண்பனை
யார் பெத்த புள்ளையோ சாரலில் நிக்குது
கவலையோடு பரிமாறிய
அந்த பறைச்சியின் கையிலிருந்து
புடிங்கித் தின்ன ஒரு துண்டு மாட்டுக்கறியில்
விக்குகிறது அழுகுரல்
No comments:
Post a Comment