Monday, April 16, 2012

Research - ஆய்வு

(this poem translated by divya and priya from tamil to english)

Work on dalit literature now –
They say –
And you will have no work later
Their threats wear the veil of advice.

I cannot choose an area of intrest
That I can truly call mine.

I have to scratch
The areas
Where others have housed
Their itch.

When will the rule
That each can scratch their own itches
Be followed?

They say they are not familiar
With any of my areas.
When I speak my language,
They are ignorant in
All of my areas.

They sey,
The rule of guidance does not apply
Within unfamiliar territories
Who do not honour
The rules only to use them against us.

These overgrown nails of mine
Became ready to scratch their itch
The pus and the blood
In their itchy boil
Now lodge between
My nails and my fingers
And make me disgusted.



தலித் இலக்கிய ஆய்வால்
வேலை கிடைக்காதாம்
அறிவுறுத்தலின் பேரினால் அச்சுறுத்தப்படுகிறோம்
எனக்கான ஆய்வின் தலைப்பை
என்னால் தேர்ந்தெடுத்துக்கொள்ளமுடியவில்லை
எவன் எவனோவின்
அரிப்பிற்கேற்ற தலைப்புகளில்
நான் சொரிய வேண்டியதிருக்கிறது
அவனவனின் அரிப்புக்கு
அவனவனே
சொரிந்துகொள்ள வேண்டிய கோட்பாடு
எப்பொழுது நிலைநிறுத்தப்படும்...

நான் அளிக்கும் எந்த தலைப்புகளிலும்
அவருக்கு பரிச்சயம் இல்லையாம்
என்மொழியில் சொன்னால்
அவற்றில் எந்த தலைப்பைப் பற்றியும்
அவனுக்கு அறிவு இல்லையாம்!
பரிச்சயமற்ற எல்லையில்
வழிகாட்டுதல் விதி இல்லையாம்
விதிகளை மதிக்காதவர்கள்
அதை
எங்களுக்கு எதிராக
பயன்படுத்த மட்டும் வைத்துக்கொள்கிறார்கள்!

நீண்டு முளைத்த என் நகங்கள்
அவனின் அரிப்புக்கு
சொரிய தயாராகிவிட்டன
அவனுடைய சொரி சிரங்கின்
சீழும் இரத்தமும்
என் நகக் கணுக்களுக்கிடையில்
ஒட்டிக்கொண்டு
அருவருப்பைத் தருகின்றன.

No comments:

Post a Comment