எதற்காக ஏனிப்படி
வெளியே படுத்து
மூலஸ்தனத்தையே
பார்த்துகொண்டிருக்கிறது
இந்த நந்தி...
சிவனுக்கு பந்தபஸ்த்தா?
அட அதில்லப்பா…
ம்ம்…
கொழுத்து மயமயவென
வனத்தில் மேய்ந்திருந்த இளங்கன்றை
பார்த்ததும் மயங்கி
புணர நினைத்தான் சிவன்…
அய்யய்ய…அப்புறம்.
ஆசையைச் சொன்னான்
மறுத்தது கன்னுக்குட்டி
ஒப்புக்கொள்ளவில்லை உதறித்தள்ளியது
கெஞ்சினான் மசியவில்லை
கட்டாயப்படுத்தினான் கட்டுப்படவில்லை
இறுதியாக,
‘தானும் புணர்வதாய்ச் சொல்லி…’
ஒப்பந்தத்தின்பேரில் ஒப்புக்கொண்டது
சம்மதித்து கையெழுத்திட்டான்...
யார் முன் புணர்வது
முதல்தவணை தனதென்றது நந்தி
பேச்சுவார்த்தை நடத்தி
தட்டிப்பறித்தான் முதல் தவணையை!
இரண்டாம் தவணை நந்திக்கு!
நினைத்தபடி செய்துமுடித்தான் சிவன்
முடிவுற்றது முதல்தவணை
அடுத்தது நந்தியன் சுற்று
ஏங்கி நின்றது, இழுத்துப் புணர்வதில்
அவன் மயக்கமுற வேண்டும்
நெனப்பின் கற்பனை கவந்துவிழுந்தது!
தன்முறை முடிந்ததும்
ஒப்பந்தத்தை ஓரங்கட்டிவிட்டு ஓடினான்
விடுமா நந்தி விடவில்லை
பின் தொரத்தியது…
ஆஅங்….
ஏமாற்றிவிட்டு ஓடியவன்
புகுந்துக்கொண்டான் கருவறைக்குள்
அப்புறம் என்னாச்சு…
வாசலில் காத்துநின்றது நந்தி
எதுக்கு?
அது… அது வந்து…
‘ஏமாத்துனா வுட்டுடுவனா
என்னக்கினாலும் வெளியே
வராமவா போயிடுவ,
அப்ப ஒன்ன
ஒழுக்காம வுடமாட்டனு’ நிக்குதாம்!
jay, payankaramaana kaRpani!
ReplyDeleteaanal, avarkalin kathai paaniyil avarkalai thiruppi adikkum uththi!
vaazha
anbudan,
puthiyamaadhavi