Sunday, May 27, 2012

துப்பாக்கிச்சூடு கையறுநிலை





அபகரித்ததை
தொலைந்ததென்று விட்டிருக்கலாம்
வஞ்சகர்களுக்கு பஞ்சமி நிலத்தை
நாம் பிச்சையிட்டோம்
என்று இருந்திருக்கலாம்
நாய்களுக்கு உண்டைச்சோறு
உருட்டி வைத்தோம்
காக்கைகளுக்கு எச்சச் சோறு அல்ல
பந்திச்சோறு பரிமாறினோம்

நிலம் மயிறுக்குச் சமம்
நீள்குறியில் வடியும் வேர்வைக்கு
நிகர்
இழந்துவிட்ட உங்களை எப்படி
மீட்டெடுப்பேன்

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
யாம் ஏழுமலையும் உடையேம்
ஜான் தாமஸையும் உடையேம்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவிலும்
எம்நிலத்தை பிறர்கொண்டார்
எம் ஏழுமலையும் இலமே
ஜான்தாமசும் இலமே

1 comment:

  1. நல்ல பதிவு. வீறு கொண்ட உன் எழுத்துக்கு அற்றைத் திங்கள் கூடுதல் வலு சேர்கிறது.

    ReplyDelete