Saturday, May 14, 2011
வழக்காற்றுக்கதை : சிவன் - பார்வதி - மூன்றுதலை பிரம்மா
அத்தனையும் அழகு அவளுக்கு
ஒன்றுவிடாமல் எல்லாம் கச்சிதம்
பெயரைக் கேட்டாலே
உமுனி முழுங்கும் பேரழகி
அவளை நினைக்கையில்
அத்தனைபேரும் பூமிக்கு பாரமாய்
கவுந்தடித்துப் படுத்தவர்கள்...
அவள்
சிவனுக்கு பொண்டாட்டியானாலும்
ஊர்க்கண்ணை உறுத்தியவள்.
எத்தனை நாள் பட்டுத்தெரித்தாள்
பிரம்மாவின் கண்ணில்
பார்வதியைப் பார்க்கும்பொழுதெல்லாம்
நினைத்துக்கொண்டான் ஏதோ ஒன்றை...
நாள் பார்த்தான்
ராத்திரியில் சிவன்
வெளியே செல்லும் நேரம் குறித்தான்
தக்கச்சமயம் பார்த்து
நெருங்கிவிட்டான் பார்வதியை...
வந்தவன் பிரம்மா என்றறிந்தாள்
எதற்காக வந்தான்
கேட்டுக்கொள்ளாமலேயே தெரிந்துகொண்டாள்.
தொடங்கிவிட்டான் லீலைகளை...
கடந்த காலங்களின் தாகத்தை
நிகழ்காலத்தின் மீது இறக்கிவைத்தான்...
வியர்வைச் சொட்ட சொட்ட
எல்லாவற்றையும் சுமந்தபடி
நீடித்திருக்கவே விரும்பினாள் தேவதை...
எல்லாம் ஆடி அடங்கிப்போய்விட்ட நேரத்தில்
தட்டல் சத்தம்
கதவைத் திறக்கத்தான் தாமதம்
உள்ளே வந்த சிவனுக்கு
சாவுமணியோசை
சங்கூதும் சத்தம்
காதில்பட்டு நுழைந்தன மூளைக்குள்
இருட்டறைக்குள் மிரண்டு கிடந்தன
அவன் கண்கள்
"நிர்வாணக் கோலங்களில்
புணர்ந்து கிடந்தன உடல்கள்"
எத்தனைச் சுருக்காய்
துண்டக்காணும் துணியக்காணும்
ஓடிவிட்டான் பிரம்மா.......
ரத்த நாளங்கள் வெடித்து கிளம்பின
"நானிருக்கையில் அவனா?"
பயப்படவில்லை பார்வதி
பதட்டமாகத்தான் சொன்னாள்
"நான் அது நீயென்றிருந்தேன்"
ஊசிகள் மண்டைக்குள் குத்தின
குழம்பினான்
"அவனெப்படி நானாக முடியும்"
ராத்திரியிருட்டில்
எதுவுமே தெரியவில்லை எனக்கு
தடவிப்பார்த்தேன் தலைகள் நான்கு
நீதானென்று நினைத்தேன் நான்...
தலைகளால் வந்ததா பிரச்சனை
எனக்கும் தலைகள் நன்கு
அவனுக்கும் தலைகள் நான்கு
இதுதாமன் உன் குழப்பமா உமையவளே...
தலைகளைத் தடவிப் பார்த்தா
நானென்று நினைத்தாய்
இனியெதற்கு உனக்கு குழப்பம்
சினந்தான் சிவன்
தேடிப்பிடித்து வெட்டினான்
பிரம்மாவின் தலைகளில் ஒன்றை...
ஒருதலை போயி
அடைமொழி வந்தது
'மூன்றுதலை பிரம்மா'
Tuesday, May 3, 2011
வழக்காற்றுக்கதை – சிவனும் நந்தியும்
எதற்காக ஏனிப்படி
வெளியே படுத்து
மூலஸ்தனத்தையே
பார்த்துகொண்டிருக்கிறது
இந்த நந்தி...
சிவனுக்கு பந்தபஸ்த்தா?
அட அதில்லப்பா…
ம்ம்…
கொழுத்து மயமயவென
வனத்தில் மேய்ந்திருந்த இளங்கன்றை
பார்த்ததும் மயங்கி
புணர நினைத்தான் சிவன்…
அய்யய்ய…அப்புறம்.
ஆசையைச் சொன்னான்
மறுத்தது கன்னுக்குட்டி
ஒப்புக்கொள்ளவில்லை உதறித்தள்ளியது
கெஞ்சினான் மசியவில்லை
கட்டாயப்படுத்தினான் கட்டுப்படவில்லை
இறுதியாக,
‘தானும் புணர்வதாய்ச் சொல்லி…’
ஒப்பந்தத்தின்பேரில் ஒப்புக்கொண்டது
சம்மதித்து கையெழுத்திட்டான்...
யார் முன் புணர்வது
முதல்தவணை தனதென்றது நந்தி
பேச்சுவார்த்தை நடத்தி
தட்டிப்பறித்தான் முதல் தவணையை!
இரண்டாம் தவணை நந்திக்கு!
நினைத்தபடி செய்துமுடித்தான் சிவன்
முடிவுற்றது முதல்தவணை
அடுத்தது நந்தியன் சுற்று
ஏங்கி நின்றது, இழுத்துப் புணர்வதில்
அவன் மயக்கமுற வேண்டும்
நெனப்பின் கற்பனை கவந்துவிழுந்தது!
தன்முறை முடிந்ததும்
ஒப்பந்தத்தை ஓரங்கட்டிவிட்டு ஓடினான்
விடுமா நந்தி விடவில்லை
பின் தொரத்தியது…
ஆஅங்….
ஏமாற்றிவிட்டு ஓடியவன்
புகுந்துக்கொண்டான் கருவறைக்குள்
அப்புறம் என்னாச்சு…
வாசலில் காத்துநின்றது நந்தி
எதுக்கு?
அது… அது வந்து…
‘ஏமாத்துனா வுட்டுடுவனா
என்னக்கினாலும் வெளியே
வராமவா போயிடுவ,
அப்ப ஒன்ன
ஒழுக்காம வுடமாட்டனு’ நிக்குதாம்!
Friday, April 1, 2011
துப்பாக்கிச்சூடு கையறுநிலை
அபகரித்ததை
தொலைந்ததென்று விட்டிருக்கலாம்
வஞ்சகர்களுக்கு பஞ்சமி நிலத்தை
நாம் பிச்சையிட்டோம்
என்று இருந்திருக்கலாம்
நாய்களுக்கு உண்டைச்சோறு
உருட்டி வைத்தோம்...
காக்கைகளுக்கு எச்சச் சோறல்ல
பந்திச்சோறு பரிமாறினோம்.
நிலம் மயிறுக்குச் சமம்
நீள்குறியில் வடியும்
வேர்வைக்கு நிகர்
இழந்துவிட்ட உங்களை எப்படி
மீட்டெடுப்பேன்....
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
யாம் ஏழுமலையும் உடையேம்
ஜான் தாமஸையும் உடையேம்..
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவிலும்
எம் நிலத்தை பிறர் கொண்டார்
யாம் ஏழுமலையும் இலமே
ஜான் தாமசும் இலமே...
Subscribe to:
Comments (Atom)